Sunday, 26 August 2018

பங்குச் சந்தையில் 5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு 5 லட்சத்தை இழப்பவரா நீங்கள்!?


        
 ஒருவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க அவர் மேதாவியாக இருக்க வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லைஇந்த வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் ஒன்றுமே தெரியவில்லை என்றால்கூட பணம் சம்பாதிப்பார்கள்ஆனால்முதல் நாள் சம்பாதிக்கலாம்இரண்டாம் நாள் சம்பாதிக்கலாம்ஆனால்மூன்றாம் நாள்... நிச்சயம் கேள்விக்குறி தான்

                                      
 தினமும் 5 ஆயிரம் சம்பாதிக்கலாம்!
ஏனெனில் கடந்த பல ஆண்டாகவே ஊர், ஊருக்குப் பல டீக்கடைகள் இருப்பதைப்போலப் பல புரோக்கிங் நிறுவனங்களும், சப்-புரோக்கிங் நிறுவனங்களும் முளைத்துவிட்டன. புரோக்கிங் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஷேர் மார்க்கெட்டில் ஈசியா சம்பாதிக்கலாம்; தினமும் 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம். 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டுவார்கள்.  பணம் சம்பாதிப்பது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. `அப்படிப் போய், இப்படி வந்துவிடலாம்' என்று வாய் கிழிய சொல்லுவார்கள். அவர்களே சம்பாதித்து இருக்க மாட்டார்கள்.   தினமும் 5 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு முதலீடு செய்து 5 லட்சத்தைப் பல பேர் இழந்து இருக்கின்றனர்ஷேர் மார்க்கெட்டில் சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுபவர்களை, ஒரு வார்த்தை அவர்களிடம், `நீங்கள் சம்பாதித்து இருக்கிறீர்களா' அல்லது `முதலீடு செய்து இருக்கிறீர்களா' என்று கேட்டுப்பாருங்கள். உடனே அவர் திருதிரு என்று முழிக்கலாம். இல்லை சார் `டைம் இல்லை' என்று வாய் ஜாலமும் காட்டலாம். `சம்பாதித்து இருக்கிறேன்' என்று சொன்னால், உடனே அதற்கான ஆதாரத்தையும் கேட்டுத்தான் பாருங்களேன். பதில் ஒரே வார்த்தை, `இல்லை' என்று தான் இருக்கும். சம்பாதித்து இருக்கலாம், ஆயிரத்தில் ஒருவர் அல்ல, லட்சத்தில் ஒருவர் மட்டுமே. அவர்கூட தினசரி வர்த்தகத்தை நன்றாகத் தெரிந்து, அதன்போக்கில் வர்த்தகம் மேற்கொள்பவர்களால் மட்டுமே பணத்தை சம்பாதிக்க முடியும்

நடுத்தெருவில்கூட நிக்கவைக்கும்!
இதில் பணம் சம்பாதித்தவர்களைவிட இழந்தவர்களே அதிகம். இது இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. இதை படிக்கும்போதே இன்னமும் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், உங்கள் அருகில் யாராவது இருந்தால் அவரிடம் `பங்குச் சந்தை' என்று சொல்லிப் பாருங்களேன் அவர் 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், ‘ஷேர் மார்க்கெட்டா.. அது ஒரு சூதாட்டம்; ஏற்கனவே லாஸ் பண்ணதே போதும்எனப் புலம்புவார்
ஆனால், இன்றளவும் இது குறித்து ஆழம் தெரியாமல் காலை விட்டு, பின் அழுபவர்கள் இருக்கின்றனர்காரணம், பேராசை; விழிப்பு உணர்வு இன்மை; தவறான வழிகாட்டுதல்; அவசரம்; தவறான நிதி மேலாண்மை எனப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஷேர் மார்க்கெட்டில் பலரும் பணத்தை இழப்பதற்கு முக்கியக் காரணம் தினசரி வர்த்தகம். இது நடுத்தெருவில்கூட ஒரு சிலரை நிக்கவைத்துள்ளது. தினசரி வர்த்தகம் குறித்து எந்த புரிதலும், அறிவும் இல்லாமல் பல லட்சம் சில்லறை முதலீட்டாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்

 நீண்ட கால முதலீடு
பணம் சம்பாதிக்கவே முடியாதா என்ற கேள்விக்கான பதில் ஒரு சில வழிகளில் ஒன்றுதான் நீண்ட கால முதலீடு. இதில் ஏமாற்றப் பல வழிகள் இருக்கின்றன; ஏமாற்றவும் பல பேர் இருக்கிறார்கள். தங்கம், ரியல் எஸ்டேட்டில் எப்படி முதலீடு மேற்கொள்ளப்படுகிறதோ, அதைப்போல பங்குச் சந்தையிலும் நீண்ட காலத்துக்கு முதலீடு மேற்கொள்வது தான் சரியான தீர்வாக இருக்கும். இங்கு பணம் சம்பாதிப்பதைப்போல வேறு எங்கும் சம்பாதிக்க முடியாது என்பதே உண்மை. ஆனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் பலர் இன்னமும் விவரம் தெரியாமல் தவறான வழிகாட்டுதல்  இல்லாமல் ஈக்விட்டி, கமாடிட்டி, கரன்சி என மாறி மாறி வர்த்தகத்தில் ஈடுபட்டு பணத்தை இழக்கிறார்கள்
ஒரு சிறந்த நிறுவனத்தின் பங்கை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, சிறப்பாகச் செயல்படும் நிறுவனத்தின் பங்கில் தொடர்ந்து முதலீடு மேற்கொள்ளலாம். எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நல்ல துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் சிறந்த நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்து தொடர்ந்து முதலீட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் முதலீட்டினை மேற்கொண்டால் நிச்சயமாக சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். பங்குச் சந்தையில் அத்தனைக்கும் ஆசைப்படாதீர்கள், பின் அவதிப்படாதீர்கள். தினமும் 5 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு, 5 லட்சத்தை இழக்காதீர்கள்
பங்குச் சந்தை குறித்துப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அது ஒன்றும் ஹைடெக்கான விஷயம் இல்லை. மேதாவிகள்தான் பங்குச் சந்தையில் பணம் பண்ண முடியும் என்கிற எண்ணத்தை மூட்டைக் கட்டிவிட்டு, அடிப்படையான சில விஷயங்களைக் கவனித்தாலே போதும், நீங்களும் சம்பாதிக்கலாம்; ஆனால் நீண்ட காலம் முதலீடு செய்யத் தயாராக இருக்க வேண்டும். அதைப் போலவே, சின்னச் சின்ன லாபம் என்று ஈட்டி, சேர்த்து வைக்கும் பழக்கமும் இருக்க வேண்டும்.  




No comments:

Post a Comment